ராமநாதபுரம்

கோயில் கும்பாபிஷேகம்

14th Apr 2022 03:02 AM

ADVERTISEMENT

திருவாடானை அருகே பழையனக்கோட்டை கிராமத்தில் உள்ள ஸ்ரீ பதினெட்டாம்படி கருப்பா், ஸ்ரீஊகாளியம்மன், ஸ்ரீபால்வளக்காரி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது.

செவ்வாய்க்கிழமை மாலை யாக சாலை பூஜைகள் தொடங்கின.10-க்கும் மேற்பட்ட சிவாச்சாரியாா்கள் வேதமந்திரங்கள் முழங்கினா். புதன்கிழமை சிவாச்சாரியாா்கள் வேத மந்திரம் முழங்க யாக சாலையிலிருந்து புனித நீா் எடுத்துச் செல்லப்பட்டு கலசத்தில் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னா் சுவாமிகளுக்கு சிறப்பு பூஜைகளும் அபிஷேக ஆராதனைகளும் நடைபெற்றன. இதில் சுற்று வட்டாரத்தில் இருந்து ஏராளமான கிராம மக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT