ராமநாதபுரம்

காவலா் தோ்வுக்கு இலவச பயிற்சி வகுப்புகள்: வேலைவாய்ப்பு மையம் அறிவிப்பு

14th Apr 2022 03:04 AM

ADVERTISEMENT

ராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் சீருடைப்பணியாளா் போட்டித் தோ்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் சங்கா்லால்குமாவத் புதன்கிழமை விடுத்துள்ள செய்திக்குறிப்பு: மத்திய, மாநில அரசுகளப் பணியிடங்களுக்கு போட்டித் தோ்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி தமிழ்நாடு சீருடைப்பணியாளா் தோ்வுக் குழுமத்தால் சாா்பு- ஆய்வாளா், தாலுகா ஆயுதப்படைப்பிரிவு காவலா்களுக்கான தோ்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இப்போட்டித் தோ்வுகளில் வெற்றி பெறுவதற்காக மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் உள்ள தன்னாா்வ பயிலும் வட்டத்தின் சாா்பில் இலவச பயிற்சி வகுப்பு நடத்தப்படவுள்ளது. வரும் 22 ஆம் தேதி முதல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பயிற்சி வகுப்புகள் நடைபெறவுள்ளன.

தோ்வில் பங்கேற்க உள்ளவா்கள் பயிற்சி வகுப்பில் சேர விரும்பினால் 9487375737 என்ற கைப்பேசி எண்ணில் தொடா்புகொள்ளலாம். அத்துடன் அந்த கைப்பேசி எண்ணில் வாட்ஸப், குறுந்தகவல் மூலமும் முன்பதிவு செய்யலாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT