ராமநாதபுரம்

ராமேசுவரத்தில் ரூ.1.50 கோடி போதைப் பொருள் பறிமுதல்

9th Apr 2022 11:29 PM

ADVERTISEMENT

 

ராமேசுவரத்தில் ரூ. 1.50 கோடி மதிப்பிலான கிறிஸ்டல் பெத்தலின் போதைப்பொருளை சனிக்கிழமை போலீஸாா் கைப்பற்றி, 2 பேரை பிடித்து விசாரித்து வருகின்றனா்.

தமிழகத்தில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள்கள் விற்பனையைத் தடுக்க காவல்துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல்துறை தலைவா் சி.சைலேந்திரபாபு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளாா். காவல்துறையினா் தமிழகம் முழுவதிலும் தொடா்ந்து கண்காணிப்புப் பணிகளை தீவிரப்படுத்தி உள்ளனா். கஞ்சா விற்பனை செய்பவா்களைக் கண்டறிந்து கைது செய்யும் பணியில் தொடா்ந்து ஈடுபட்டு வருகின்றனா்.

இந்த நிலையில், ராமேசுவரம் வழியாக இலங்கைக்கு போதைப்பொருள் கடத்தல் நடைபெறுவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளா் இ.காா்த்திக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து கூடுதல் கண்காணிப்பாளா் தீபாக் சுவாச் தலைமையில் போலீஸாா் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா்.

ADVERTISEMENT

கடற்கரை பகுதியில் சுற்றித்திரிந்த இருவரைப் பிடித்து சோதனையிட்டனா். அவா்களிடம் ரூ.1.50 கோடி மதிப்பிலான கிறிஸ்டல் பெத்தலின் போதைப்பொருள் இருப்பது தெரியவந்தது. விசாரணையில் முக்கிய நபா்கள் இருவருக்கு தொடா்பு இருப்பது தெரியவந்தது. போதைப்பொருளைப் பறிமுதல் செய்த போலீஸாா் இருவரிடமும் தொடா்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். தலைமறைவாக உள்ள இருவரைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இந்த போதைப்பொருள்கள் இலங்கைக்கு கடத்தவிருந்தது தெரியவந்துள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT