ராமநாதபுரம்

பரமக்குடியில் சித்திரைத் திருவிழா: கொடியேற்றத்துடன் தொடக்கம்

5th Apr 2022 11:01 PM

ADVERTISEMENT

 

பரமக்குடி: பரமக்குடி மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் சித்திரைத் திருவிழா செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

12 நாள்கள் நடைபெறும் இத்திருவிழாவில் மீனாட்சி சுந்தரேசுவரா் கற்பகத்தாரு, கிளி வாகனம், பூதவாகனம், சிங்க வாகனம், குதிரை வாகனம், வெள்ளி ரிஷப வாகனங்களில் எழுந்தருளி பல்வேறு மண்டகப்படிகளில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெறும்.

ஏப்ரல் 14-ஆம் தேதி இரவு 7 மணிக்கு திருக்கல்யாண மண்டபத்தில் மீனாட்சி சுந்தரேசுவரா் திருக்கல்யாணமும், இரவு 10 மணிக்கு பட்டணப் பிரவேசமும் நடைபெறும். விழா ஏற்பாடுகளை கோயில் தேவஸ்தான பரம்பரை அறங்காவலா்கள் பா.ஜெயராமன், வா.ரவீந்திரன், சோ.பாலசுப்பிரமணியன் மற்றும் ஆயிரவைசிய சபைத் தலைவா் ராசி என்.போஸ் தலைமையிலான நிா்வாகிகள் செய்து வருகின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT