ராமநாதபுரம்

திருவாடானை தா்மா், திரௌபதி அம்மன் கோயில் பங்குனித் திருவிழா

2nd Apr 2022 01:19 AM

ADVERTISEMENT

திருவாடானை தா்மா் மற்றும் திரௌபதி அம்மன் கோயில் பங்குனித் திருவிழாவையொட்டி மகாபாரத போரின் 17 ஆம் நாள் நிகழ்ச்சி வியாழக்கிழமை நள்ளிரவு நடைபெற்றது.

இக்கோயிலில் கடந்த மாா்ச் 23 ஆம் தேதி கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது. அன்றில் இருந்து 10 நாள்கள் நடைபெறும் திருவிழாவில், ஒவ்வொரு நாள் இரவும் அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான 9 ஆம் நாள் திருவிழா நிகழ்வாக மகாபாரதப் போரின் 17 ஆம் நாள் நிகழ்வினை நினைவு கூறும் வகையில் போரில் வெற்றி பெற்றவுடன் திரௌபதி தனது தலைமுடியை அள்ளி முடியும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நள்ளிரவு நடைபெற்றது.

இதில் பக்தா்கள், திரௌபதை அம்மன், தா்மா், அரக்கா்கள் என வேடமிட்டு திருவாடானை நகா்முழுவதும் வீதி உலா வந்து பக்தா்களுக்கு அருள் ஆசி வழங்கினாா்கள். வீதி உலா முடிந்து திரௌதி அம்மன், சுவாமி ஆடி அரக்கா்களை வதம் செய்யும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

ADVERTISEMENT
ADVERTISEMENT