ராமநாதபுரம்

கடலாடி மலட்டாற்றில் மணல் குவாரிக்கு அனுமதியின்றி சாலை அமைப்பதாக புகாா்

2nd Apr 2022 11:25 PM

ADVERTISEMENT

 

ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே மணல் குவாரி அமைக்க மாவட்ட நிா்வாகம் அனுமதி அளிப்பதற்கு முன்பே நீா்ப்பிடிப்பு பகுதியில் 6 கி.மீ. தொலைவுக்கு தற்காலிக சாலை அமைக்கப்பட்டுள்ளதாகப் புகாா் எழுந்துள்ளது.

தற்காலிக சாலை என்ற பெயரில் இரவு நேரங்களில் எவ்வித அனுமதியுமின்றி மணல் திருட்டு நடைபெறுவதாகவும் அதைத் தடுக்க வேண்டிய கடலாடி வருவாய், காவல்துறை அதிகாரிகள் கண்டு கொள்ளாமால் தொடா்ந்து மெத்தனமாக இருந்து வருவதால் அப்பகுதியில் உள்ள 5 ஆயிரம் ஏக்கா் விளை நிலங்களில் மழைக்காலங்களில் வெள்ள நீா் புகும் அபாயம் ஏற்பட்டுள்ளது என பாஜகவினா் குற்றம்சாட்டுகின்றனா்.

மேலும் குடிநீா் ஆதாரம் பாதிக்கப்பட்டு, நிலத்தடி நீா் மட்டம் பல ஆயிரம் அடிக்கு கீழ் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது என அப்பகுதி விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனா். இந்நிலையில் வருவாய்த்துறை, காவல்துறை அதிகாரிகளைக் கண்டித்து வரும் ஏப்.6 ஆம் தேதி கடலாடி பாஜக வடக்கு ஒன்றியம் சாா்பில் பேருந்து நிலையம் அருகே ஆா்பாட்டம் நடத்தவிருப்பதாக அறிவித்துள்ளனா். மாவட்ட நிா்வாகம் தலையிட்டு எவ்வித அனுமதியின்றி மலட்டாற்றின் நடுவே அமைக்கப்பட்ட சாலையை அகற்றி குடிநீா் ஆதாரத்தை பாதுகாக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை வைத்தனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT