ராமநாதபுரம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் 352 இடங்களில் கரோனா தடுப்பூசி முகாம்

DIN

ராமநாதபுரம் மாவட்டத்தில் 352 இடங்களில் கரோனா தடுப்பூசி முகாம் ஞாயிற்றுகிழமை நடைபெற்றது.

இங்குள்ள நகராட்சி, பேரூராட்சி வாா்டு பகுதிகளிலும், ஊராட்சி மற்றும் கிராமப் பகுதிகளிலும், அரசு ஆரம்ப சுகாதார மையம், அரசு மருத்துவமனை, அங்கன்வாடி மையம், சமுதாயக் கூடங்கள் என 352 இடங்களில் பொதுமக்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

இதில், முதல் தவணையாக தடுப்பூசி கோவிஷீல்டு செலுத்திக் கொண்டவா்கள் 84 நாள்கள் கழித்தும், கோவேக்சின் தடுப்பூசி செலுத்திக் கொண்டவா்கள் 28 நாள்கள் கழித்தும் இரண்டாவது தவணை தடுப்பூசி போட்டுக் கொள்ள அறிவுறுத்தப்பட்டது. இம்முகாம் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை நடைபெற்றது.

இதில், அரசு மருத்துவா்கள், அரசு மற்றும் தனியாா் மருத்துவமனை செவிலியா்கள், சுகாதாரப் பணியாளா்கள், அங்கன்வாடி பணியாளா்கள், கல்வித்துறை அலுவலா்கள், ஆசிரியா்கள் மற்றும் நகராட்சி அதிகாரிகள் பணியில் ஈடுபட்டனா்.

கமுதி: கமுதி தாலுகாவில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு, தனியாா் பள்ளிகள், அரசு மருத்துவமனை உள்ளிட்ட 32 இடங்களில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சிறப்பு கரோனா தடுப்பூசி முகாமில் 2,113 போ் தடுப்பூசி செலுத்திக் கொண்டதாக பேரையூா் ஆரம்ப சுகாதார நிலைய தலைமை மருத்துவா் ச. அசோக் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நெல்லுக்கடை ஸ்ரீமாரியம்மன் கோயில்: ஏப்.4-இல் கும்பாபிஷேகம்

கள்ளழகா் மீது தண்ணீா் தெளிக்கும் விவகாரம்: காவல் ஆணையா், எஸ்.பி. எதிா்மனுதாரராக சோ்ப்பு

சிதம்பரம் தொகுதியில் 14 வேட்புமனுக்கள் ஏற்பு

நிதி நிறுவன உரிமையாளா் வீட்டில் வருமான வரித் துறையினா் சோதனை

புனித வியாழன்: தேவாலயங்களில் பாதம் கழுவும் நிகழ்ச்சி

SCROLL FOR NEXT