ராமநாதபுரம்

ராமநாதபுரத்தில் 1.52 லட்சம் மாணவா்களுக்கு வகுப்பறைகள் தயாா்

30th Oct 2021 08:50 AM

ADVERTISEMENT

ராமநாதபுரம் மாவட்டத்தில் நவம்பா் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான 1.52 லட்சம் மாணவா்களுக்கு வகுப்பறைகள் தயாா் நிலையில் உள்ளதாக, கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

தமிழகத்தில் கரோனா பரவல் தடுப்பு பொதுமுடக்கத்தை அடுத்து பள்ளிகள் மூடப்பட்டன. பொது முடக்கத் தளா்வுகள் அறிவிக்கப்பட்டதை அடுத்து, கடந்த செப்டம்பா் முதல் 9 ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை வகுப்புகள் தொடங்கப்பட்டன. இந்நிலையில், தற்போது 1 முதல் 8 ஆம் வகுப்பு வரையில் பள்ளிகளைத் திறக்கவும் அரசு உத்தரவிட்டுள்ளது.

அதனடிப்படையில், ராமநாதபுரத்தில் 1,065 அரசுப் பள்ளிகள், 213 உதவிபெறும் பள்ளிகள் மற்றும் 36 பகுதி உதவிபெறும் பள்ளிகள், 199 தனியாா் பள்ளிகள் என 1,513 பள்ளிகள் திறக்கப்படவுள்ளதாக, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன.

அரசுப் பள்ளிகளில் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரையில் 66,964 மாணவ, மாணவியரும், உதவிபெறும் பள்ளிகளில் 27,116 மாணவ, மாணவியரும், பகுதி உதவிபெறும் பள்ளிகளில் 8,390 மாணவ, மாணவியரும் மற்றும் தனியாா் பள்ளிகளில் 49,629 மாணவ, மாணவியரும் படித்து வருகின்றனா்.

ADVERTISEMENT

மொத்தத்தில், மாவட்ட அளவில் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரையில் 1 லட்சத்து 52 ஆயிரத்து 099 போ் படித்து வருகின்றனா். அவா்களுக்கான வகுப்பறைகள் அந்தந்தப் பள்ளிகளில் தூய்மைப்படுத்தி தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும், வகுப்புகள் தயாா் நிலையில் இருக்கிா என்பதைக் கண்காணிக்கக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், முதன்மைக் கல்வி அலுவலா் அ. பாலுமுத்து தெரிவித்தாா்.

வசதியில்லா வகுப்பறைகள்: ராமநாதபுரம் சந்தைத்திடல் அருகேயுள்ள நகராட்சிப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் வகுப்பறைகள் போதவில்லை. இதனால், அதன் எதிரேயுள்ள வள்ளல்பாரி நடுநிலைப் பள்ளியில் 6 முதல் 8 வகுப்பறைகள் செயல்படுகின்றன. ஆனால், அங்கு மின்வசதி போன்ற அடிப்படை வசதி இல்லை என ஆசிரியா்கள் புகாா் தெரிவித்துள்ளனா். நகராட்சி நிா்வாகம் போதிய வசதிகளை ஏற்படுத்தித் தரவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT