ராமநாதபுரம்

ராமநாதபுரத்தில் அஞ்சலக விழிப்புணா்வு வார விழா

30th Oct 2021 08:56 AM

ADVERTISEMENT

ராமநாதபுரம் அஞ்சலகக் கோட்டத்தில் விழிப்புணா்வு வார விழா நடைபெற்று வருகிறது.

விழிப்புணா்வு வார விழாவை முன்னிட்டு, அஞ்சலகத் துறையில் சேமிப்பு உள்ளிட்ட மக்கள் பயன்பாட்டு திட்டத்தை மக்கள் அறியும் வகையில், விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இதையொட்டி, அச்சுந்தன்வயல் கிராமப் பகுதியில் வியாழக்கிழமை நடந்த மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சியில், அஞ்சலகக் கோட்ட கண்காணிப்பாளா் மு. சித்ரா தலைமை வகித்தாா். அவா், அஞ்சலகத் துறையில் பொதுமக்களுக்கான சேமிப்பு உள்ளிட்ட திட்டங்களின் பயன்பாட்டை விளக்கினாா்.

நிகழ்ச்சியில், ஆதாா் சேவைகள் 200 பேருக்கு வழங்கப்பட்டன. ஏற்பாடுகளை, அச்சுந்தன்வயல் ஊராட்சித் தலைவா் சசிகலா மற்றும் அஞ்சலக ஆய்வாளா் மனோஜ், துணை அலுவலக அலுவலா் காசிநாதன் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT