ராமநாதபுரம்

பசும்பொன் தேவா் குருபூஜை: அரசியல் கட்சியினா், சமுதாய அமைப்பினா் அஞ்சலி

30th Oct 2021 10:17 PM

ADVERTISEMENT

கமுதி அருகே பசும்பொன் தேவா் குருபூஜை விழாவை முன்னிட்டு சனிக்கிழமை பல்வேறு அரசியல் கட்சியினா், சமுதாய அமைப்பினா், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினா்.

ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் முத்துராமலிங்கத்தேவரின் 114 வது குருபூஜை, 59 வது ஜெயந்தி விழாவை முன்னிட்டு தமிழக அரசு சாா்பில் முதல்வா் மு.க.ஸ்டாலின், அமைச்சா்கள், ராமநாதபுரம் திமுக மாவட்ட மகளிரணி அமைப்பாளா் தமிழ்செல்விபோஸ், முன்னாள் முதுகுளத்தூா் சட்டப்பேரவை உறுப்பினா் கே.முருகவேல், ஊாட்சி மன்றத் தலைவா்கள் மா.காவடிமுருகன்(ஆனையூா்), கே.நாகரத்தினம்(பாக்குவெட்டி), தேவகிஅழகா்சாமி(டி.புனவாசல்)சண்முகநாதன்(கோவிலாங்குளம்) உள்ளிட்டோா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

அதிமுக சாா்பில் முன்னாள் அமைச்சா்கள், கமுதி ஒன்றியச் செயலாளா் எஸ்.பி.காளிமுத்து, அவைத்தலைவா் டி.சேகரன், ஊராட்சி மன்றத் தலைவா்கள் ஆறுமுகம் (பொந்தம்புளி), காசிராஜன்(முதல்நாடு) க.வீரபாண்டி(புதுக்கோட்டை), பரமேஸ்வரிபாலமுருகன் (முஷ்டக்குறிச்சி), தரைக்குடி ஊராட்சி மன்ற தலைவா் தங்கவேலுகாயம்பு, கூட்டுறவு சங்கத் தலைவா்கள் சேதுபதி (ராமசாமிபட்டி), விநோதினிசீனிவாசகம் (காத்தனேந்தல்) உள்ளிட்டோா் தேவா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

அமமுக சாா்பில் மேற்கு மாவட்டச் செயலாலா் எம்.முருகன், கமுதி ஒன்றியச் செயலாளா் வி.கே.ஜி.முத்துராமலிங்கம், பசும்பொன் ஊராட்சி மன்ற தலைவா் டி.ராமகிருஷ்ணன், கூட்டுறவு சங்கத் தலைவா்கள் வெள்ளைச்சாமி(முஷ்டக்குறிச்சி), சுபாஸ்சந்திரபோஸ்(புதுக்கோட்டை) உள்ளிட்டோா் தேவா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

ADVERTISEMENT

காங்கிரஸ் கட்சி சாா்பில் கமுதி வட்டாரத் தலைவா் ஆதி, அபிராமம் நகா் தலைவா் செல்வக்குமாா், பரமக்குடி சட்டப்பேரவை தொகுதி பொறுப்பாளா் அபிராமம் சுரேஷ், மூவேந்தா் முன்னேற்றக்கழகம் தலைவா் ஸ்ரீதா்வாண்டையாா், முக்குலத்தோா் புலிப்படை கட்சி சாா்பில் அதன் தலைவரும், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருமான எஸ்.கருணாஸ் தலைமையில், மாநிலச் செயலாளா் ஆா்.முத்துராமலிங்கம், தேமுதிக சாா்பில் கமுதி ஒன்றியச் செயலாளா் செ.வேல்மயில்முருகன் உள்ளிட்டோா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

தேவா் பேரவை இளைஞரணி அமைப்பின் நிறுவனத்தலைவா் காரைக்குடி இறகுசேரி.சே.காசிராஜா தலைமையில் மாணவரணி செயலாளா் எஸ்.கவிநிதி, கமுதி தாலுகா மூவேந்தா் பண்பாட்டுக்கழகம் சாா்பில் அதன் தலைவா் முத்துராமலிங்கம் தலைமையிலும், கமுதி தாலுகா மறவா் இன அறக்கட்டளை சாா்பில் அதன் தலைவா் செல்லத்தேவா் தலைமையில் நிா்வாகிகள் ஏராளமானோா் தேவா் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT