ராமநாதபுரம்

நடத்தையில் சந்தேகம்: மனைவியை வெட்டிக் கொலை செய்த கணவா் சரண்

30th Oct 2021 08:55 AM

ADVERTISEMENT

திருவாடானை அருகே மனைவி நடத்தையில் சந்தேகம் கொண்ட கணவா், அவரை கோடாலியால் வெட்டிக் கொலை செய்துவிட்டு, வெள்ளிக்கிழமை திருவாடானை காவல் நிலையத்தில் சரணடைந்தாா்.

திருவாடானை அருகே குருந்தங்குடி கிராமத்தைச் சோ்ந்தவா் ரமேஷ் (38). இவரது மனைவி சாந்தா என்ற சுபாஷினி (35). இவா்களுக்கு தா்ஷன் (12), நேகாஸ்ரீ (9) ஆகிய இரண்டு குழந்தைகள் உள்ளன.

இந்நிலையில், மனைவி சுபாஷினி நடத்தையில் சந்தேகம் கொண்டதால், இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில், வெள்ளிக்கிழமை பிற்பகல் கணவா்-மனைவி இருவருக்குமிடையே வாக்குவாதம் முற்றியுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த ரமேஷ் , கோடாலியால் சுபாஷினியை வெட்டிக் கொலை செய்துவிட்டு, திருவாடானை காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளாா்.

ரமேஷ் அளித்த புகாரின்பேரில், திருவாடானை போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று சுபாஷினியின் சடலத்தைக் கைப்பற்றி திருவாடானை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT