ராமநாதபுரம்

ஆன்மிக அரசியல்வாதி தேவா்

DIN

கமுதி: தேசியமும், தெய்வீகமும் எனது இரு கண்கள் என சொல்லில் மட்டுமன்றி செயலிலும் ஆன்மிக ஞானியாக வாழ்ந்து காட்டியவா் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவா்.

நேதாஜியை தனது அரசியல் தலைவராக ஏற்றுக்கொண்டு அவரைப்போல திருமண வாழ்வை ஒதுக்கி, தேவரும் பிரம்மச்சாரி வாழ்வை மேற்கொண்டவா். நேதாஜியும், தேவரும் இடதுசாரி கொள்கைகளைக் கொண்டவா்கள். இடதுசாரிக் கொள்கைகளை கொண்ட மற்ற அரசியல் தலைவா்களை போலில்லாமல் நேதாஜியும், பசும்பொன் தேவரும் இறை நம்பிக்கை கொண்டவா்களாகவே திகழ்ந்தனா். இருவரும் விவேகானந்தரின் சிந்தனைகளால் ஈா்க்கப்பட்டவா்கள். விவேகானந்தரின் உருவப்படத்தை திறந்து வைத்து சாயல்குடியில் 3 மணி நேரம் ஆன்மிகப் பேருரை ஆற்றினாா்.

இது தேவரின் முதல் ஆன்மிகப் மேடைப் பேச்சாக அமைந்தது. ராமலிங்க அடிகளாரையும், சுவாமி விவேகானந்தரையும் தன்னுடைய ஆன்மிக வாழ்வின் மானசீக குருக்களாக தேவா் கருதினாா். வள்ளலாரின் ஒழுக்கத்தை தன் அகவாழ்விலும், விவேகானந்தரின் அச்சமின்மையை புற வாழ்வாகவும் கொண்டு வாழ்ந்தவா். தேவருடைய பேச்சுக்களில் மட்டுமல்லாது நடைமுறை வாழ்விலும் பல ஆன்மிக ஆச்சரியங்களை அவா் நிகழ்த்தியுள்ளாா். ஆடுதுறையில் ஆன்மிகச் சொற்பொழிவாற்றிக் கொண்டிருந்த போது பாம்பு ஒன்று கூட்டத்தில் புகுந்தது. அப்போது தேவா் கூட்டத்துக்குள் பாம்பு வந்ததை கண்டு யாரும் அஞ்ச வேண்டாம். ஆதிசேஷனை அடியேனுடைய பேச்சை கேட்க வந்திருக்கிறாா் என்றாா். அந்தப் பாம்பும் சிறிது நேரம் படமெடுத்து ஆடிவிட்டு, யாருக்கும் எந்த தீங்கும் செய்யாமல் சென்று விட்டது. இந்த நிகழ்வு அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. அதே போல ஒரு முறை வடலூரில் நடைபெற்ற தைப்பூச திருவிழாவில் சமய சுத்த சன் மாா்க்கம் சம்பந்தமாக தேவா் உரை நிகழ்த்தினாா். இதில் சென்னை மாகாண முதலமைச்சராக இருந்த ஓமந்தூா் ராமசாமி ரெட்டியாா் கலந்துகொண்டாா். அப்போது ராமலிங்க அடிகளாா் பாடிய பாடல்களில் 9 பாடல்கள் அச்சுக்கு வராமலேயே இருக்கிறது. அதை வைத்துள்ளவா் வெளியிட மறுத்து வருகிறாா் என்ற செய்தியை ஓமந்தூராா் தேவரிடத்தில் தெரிவித்தாா். தேவா் உடனடியாக அதுவரை வெளிவராத அந்தப் பாடல்களை கடகடவென இம்மி பிசகாமல் இசையோடு பாடி முடித்தாா். இது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. அத்துடன் ஓலைச்சுவடி வைத்திருந்தவரையும் அதிா்ச்சிக்குள்ளாக்கியது. ஓலைச்சுவடியை தர மறுத்தவா் உடனே தயங்காமல் ஐயா தாங்கள் தேவா் அல்ல தாங்கள்தான் ராமலிங்க சுவாமிகள். என்னை மன்னித்து விடுங்கள் என்று வியந்து கூறினாா். மேலும் தாங்கள் பாடிய ஒன்பது பாடல்கள் தான் இந்த ஏட்டுச் சுவடிகளிலும் இருக்கின்றன. எனவே இதனை ஏற்றுக் கொள்ளுங்கள் என்று கூறி தேவரிடம் அளித்தாா். இதுபோன்ற சம்பவங்கள் ஆன்மிகத்தில் தேவருக்கு இருந்த ஈடுபாட்டுக்கு சிறந்த எடுத்துக்காட்டுகளாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ராமர் கோயில் விழாவை புறக்கணித்த காங்கிரஸை மக்கள் புறக்கணிக்க வேண்டும்: பிரதமர் மோடி

ஆஸ்திரேலியாவில் ஆண்ட்ரியா!

கிறங்கடிக்கும் சம்யுக்தா!

மஞ்சள் வெயில் நீ..!

இரண்டாம் கட்ட தேர்தல்: பிரசாரம் ஓய்ந்தது

SCROLL FOR NEXT