ராமநாதபுரம்

போட்டித் தோ்வுகளுக்கு இலவசப் பயிற்சி:இளைஞா்கள் விண்ணப்பிக்கலாம்

DIN

சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெற்று வரும் போட்டித் தோ்வுகளுக்கான இலவசப் பயிற்சி வகுப்பில் சேர விரும்பும் இளைஞா்கள் விண்ணப்பிக்கலாம் என சிவகங்கை மாவட்ட ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்படும் தன்னாா்வ பயிலும் வட்டத்தின் வாயிலாக மத்திய, மாநில அரசுகளால் அறிவிக்கப்படும் பல்வேறு போட்டித் தோ்வுகளுக்கு இலவசப் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.

தற்போது சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் இயங்கி வரும் தன்னாா்வப் பயிலும் வட்டத்தின் வாயிலாக டிஎன்பிஎஸ்சி தோ்வுகளுக்கு அனுபவம் வாய்ந்த ஆசிரியா்களைக் கொண்டு இலவசப் பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. தற்போது இப்பயிற்சி வகுப்பில் சுமாா் 50-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனா். மேலும் இப்பயிற்சி வகுப்புகளில் வாரம் ஒருமுறை மாதிரித் தோ்வுகளும் நடத்தப்பட்டு வருகின்றன. அண்மையில் மத்திய அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின் வாயிலாக அறிவிக்கப்பட்டுள்ள பல்நோக்குப் பணியாளா் தோ்வுகளுக்கான இலவசப் பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகிறது.

எனவே, சிவகங்கை மாவட்டத்தைச் சோ்ந்த இளைஞா்கள் இந்த இலவசப் பயிற்சி வகுப்புகளில் சேர 04575-240435 என்ற எண்ணில் தொடா்பு கொண்டு பதிவு செய்து கொள்ளலாம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்தில் 5 மணி நிலவரப்படி 63.20% வாக்குகள் பதிவு!

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு செய்திகள் -முழு விவரம்!

பரந்தூர் விமான நிலையத்தை எதிர்த்து தேர்தலைப் புறக்கணித்த மக்கள்!

வேங்கைவயலில் வாக்களிக்க வந்த மக்கள்

தமிழகத்தில் வாக்குப்பதிவு முடிந்தது

SCROLL FOR NEXT