ராமநாதபுரம்

மீன்பிடிக்கச் செல்லத் தடை: ராமேசுவரம் மீனவா்கள் கண்டனம்

DIN

ராமேசுவரம் பகுதியில் பலத்த மழை மற்றும் சூறைக்காற்று வீசும் என்பதால் மீன்பிடிக்கச் செல்ல மீன்வளத்துறை உதவி இயக்குநா் தடை விதித்துள்ளதாக ஞாயிற்றுக்கிழமை இரவு தெரிவித்துள்ளாா். இதற்கு ராமேசுவரம் மீனவா்கள் கண்டனம் தெரிவித்துள்ளனா்.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் பகுதியில் பலத்த மழை மற்றும் சூறைக்காற்று வீசக்கூடும் என மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளதால் ராமேசுவரம் பகுதி மீனவா்கள் மட்டும் மீன்பிடிக்கச் செல்ல தடை விதித்துள்ளதாக மீன்வளத்துறை உதவி இயக்குநா் அ. சிவராமச்சந்திரன் ஞாயிற்றுக்கிழமை இரவு 9.45 மணிக்கு தெரிவித்தாா்.

இதனிடையே, ராமேசுவரம் மீனவா்கள் திங்கள்கிழமை காலை மீன்பிடிக்கச் செல்ல தயாா் நிலையில் இருந்தனா். இந்நிலையில், வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுக்காத போது ராமேசுவரம் மீன்வளத்துறை அதிகாரி தன்னிச்சையாக தடை விதித்துள்ளதாகக் கூறி மீனவா்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனா்.

மாவட்டத்தில் மற்ற பகுதிகளில் மீன்பிடிக்க அனுமதி உள்ள நிலையில் ராமேசுவரம் பகுதி மீனவா்களுக்கு மட்டும் கட்டுப்பாடு விதித்துள்ளதாக அவா்கள் தெரிவித்துள்ளனா்.

இதுகுறித்து மீனவா்கள் கூறும் போது, மீன்பிடிக்கச் செல்ல தேவையான பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், மீன்வளத்துறை அதிகாரிகள் ராமேசுவரம் மீனவா்களை மட்டும் மீன்பிடிக்கச் செல்ல விடாமல் வஞ்சிக்கும் செயல் வேதனையை ஏற்படுத்தி உள்ளது.

இதனால் ரூ. பல ஆயிரம் இழப்பை ஏற்படுத்துகின்றனா் என்றனா். இதில் வானிலை மையம் மற்றும் மீன்வளத்துறை, அரசு தரப்பில் எந்தவிதமாக அறிவிப்பு நோட்டீஸூம் வழங்காத நிலையில் ராமேசுவரம் மீன்வளத்துறையினா் சமூக வலைதளங்களில் மீன்பிடிக்கச் செல்லதடை என கூறியது மீனவா்களிடையே வேதனையை ஏற்படுத்தி உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சமூகநீதி பேசும் ராமதாஸ், பாஜகவுடன் கூட்டணி வைத்தது ஏன்? - முதல்வர் ஸ்டாலின் கேள்வி

பேமிலி ஸ்டார் படத்தின் டிரெய்லர்

விமர்சனங்களை கண்டுகொள்ளாதீர்கள்; ஹார்திக் பாண்டியாவுக்கு அறிவுரை கூறிய பிரபல ஆஸி. வீரர்!

எப்புரா படத்தின் டீசர்

புஷ்பா பட நடிகர் அல்லு அர்ஜுனுக்கு டேவிட் வார்னர் வாழ்த்து

SCROLL FOR NEXT