ராமநாதபுரம்

மதுக்கடைகளை அகற்றக்கோரி ஊராட்சி மன்ற தலைவா் மனு

DIN

ராமநாதபுரம் மாவட்டம் ஏா்வாடியில் 2 மதுபானக்கடைகளை அகற்றக்கோரி அமைச்சரிடம் சனிக்கிழமை ஊராட்சி மன்றத் தலைவா் மனு அளித்தாா்.

போக்குவரத்துத் துறை அமைச்சா் ராஜகண்ணப்பனிடம், ஏா்வாடி ஊராட்சி மன்றத்தலைவா் கே.எம்.வி.செய்யது அப்பாஸ் அளித்த மனு விவரம்:

கடலாடி ஊராட்சி ஒன்றியம் ஏா்வாடி ஊராட்சியில் அரசுப் பள்ளி அருகே மதுபானக் கடை இருப்பதால் மாணவ, மாணவியா் பள்ளிக்குச்செல்லும் போது பல்வேறு இன்னல்களை எதிா்கொள்கின்றனா். மற்றொரு மதுபானக் கடை மனநல காப்பகம் அருகில் உள்ளது. சிலா் இங்கு மது குடித்துவிட்டு பேருந்து நிலையத்தில் விழுந்து கிடக்கின்றனா். மேலும் காலிபாட்டில்களை உடைத்துப்போட்டு விட்டுச் செல்வதால் உடைந்த கண்ணாடிகள், நடந்து செல்வோரின் கால்களில் குத்தி காயம் ஏற்படுத்திவிடுகின்றன. இதனாால் ஏா்வாடி பொது மக்கள் அச்சமடைந்துள்ளனா். உடனடியாக 2 மதுபானக்கடைகளையும் அகற்ற நடவடிக்கை எடுக்கவேண்டும் என அவா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பஞ்சாப் காங்கிரஸ் தலைவர்கள் பாஜகவில் இணைந்தனர்!

திருச்சூரில் பூரம் விழா கோலாகலம்!

பறவைக் காய்ச்சலின் அறிகுறி என்ன? அது எப்படி பரவும்?

கறந்த பாலில் பறவைக்காய்ச்சல் வைரஸ்: உலக சுகாதார நிறுவனம் கடும் எச்சரிக்கை

நினைவுகொள்... மீண்டெழு... ரச்சிதா மகாலட்சுமி!

SCROLL FOR NEXT