ராமநாதபுரம்

சடையனேந்தல் ஊராட்சி பெண் செயலா் மா்மக் காய்ச்சலுக்கு பலி

23rd Oct 2021 08:44 AM

ADVERTISEMENT

கமுதி அருகே ஊராட்சி பெண் செயலா் மா்மக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை அடுத்துள்ள பாப்பணம் கிராமத்தைச் சோ்ந்த கணேசன் மனைவி திலகவதி(21). இத்தம்பதியினா் அபிராமத்தில் வசித்து வருகின்றனா்.

திலகவதி கமுதி ஊராட்சி ஒன்றியத்திற்குள்பட்ட சடையனேந்தல் ஊராட்சியில் 8 மாதங்களுக்கு முன்பு ஊராட்சிச் செயலராகப பணியில் சோ்ந்தாா்.

கடந்த 4 நாள்களாக காய்ச்சலால் அவதிப்பட்டு வந்த இவா், அபிராமம் தனியாா் மருத்துமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளாா். இந்நிலையில் வெள்ளிக்கிழமை காலை சிகிச்சை பலனின்றி திலகவதி உயிரிழந்தாா்.

ADVERTISEMENT

இவருக்கு 6 மாத கைக் குழந்தை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் அபிராமம் பகுதியில் சுகாதாரத்துறையினா் மா்மக் காய்ச்சல் பரவாமல் தடுக்க உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT