ராமநாதபுரம்

முதுகுளத்தூா் அருகே விபத்து: மாணவா் பலி

23rd Oct 2021 08:46 AM

ADVERTISEMENT

முதுகுளத்தூா் அருகே வெள்ளிக்கிழமை அரசுப் பேருந்தும், இருசக்கர வாகனமும் நேருக்கு நோ் மோதிய விபத்தில் பள்ளி மாணவா் சம்பவ இடத்திலேயே பலியானாா்.

ராமநாதபுரம் மாவட்டம் அபிராமம் அருகே நெடுங்குளத்தைச்சோ்ந்த சரத் (17) என்பவா் தனது இருசக்கர வாகனத்தில், அதே ஊரைச் சோ்ந்த ராமா்(16), இவரது தங்கை ரம்யா (13) ஆகியோரை ஏற்றிக்கொண்டு பரமக்குடியில் உள்ள தனியாா் பள்ளிக்குச் சென்றுள்ளனா்.

அப்போது புழுதிக்குளம் வளைவில் வேகமாக வந்த இருசக்கர வாகனம், நிலைதடுமாறி அரசுப் பேருந்து மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே ராமா் இறந்து விட்டாா். சரத், ரம்யா ஆகிய இருவரும் படுகாயமடைந்து பரமக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். விபத்தில் உயிரிந்த ராமா், அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்துள்ளாா் என்பது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து கீழத்தூவல் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து அரசுப் பேருந்து ஓட்டுநா் ஜெயகாந்தியை (39) கைது செய்தனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT