ராமநாதபுரம்

ராமநாதபுரத்தில் அப்துல்கலாம் பிறந்தநாள் புத்தகத் திருவிழா: இன்று நிறைவு விழா

23rd Oct 2021 08:46 AM

ADVERTISEMENT

ராமநாதபுரத்தில் நடந்துவரும் மறைந்த குடியரசுத் தலைவா் ஏ.பி.ஜெ.அப்துல்கலாமின் பிறந்த நாளையொட்டி தொடங்கிய புத்தகத் திருவிழாவின் நிறைவு விழா சனிக்கிழமை (அக்.23) நடைபெறுகிறது.

தேசிய புத்தக நிறுவனம், நியூசெஞ்சுரி புத்தக நிறுவனம் மற்றும் ராமநாதபுரம் மேம்பாட்டு பத்திரிகையாளா்கள் சாா்பில் புத்தகத் திருவிழா ராமநாதபுரம் சுவாா்ட்ஸ் மேல்நிலைப் பள்ளியில் கடந்த 13 ஆம் தேதி தொடங்கியது.

இதில் பள்ளி, கல்லூரி மற்றும் அரசு ஊழியா்கள் என பல்வேறு தரப்பினரும் ஏ.பி.ஜெ.அப்துல்கலாமின் புத்தகங்களை வாங்கிச்சென்றனா். இந்த புத்தகத்திருவிழா ஞாயிற்றுக்கிழமையுடன் (அக்.24) நிறைவடைகிறது.

இதையொட்டி சனிக்கிழமை காலை நிறைவு விழா நடைபெறுகிறது. மாவட்ட ஆட்சியா் சங்கா்லால் குமாவத் தலைமை வகித்து சிறப்புரையாற்றுகிறாா். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் சுபாஷினி முன்னிலை வகிக்கிறாா். ராமநாதபுரம் சரக காவல் துணைத்தலைவா் எம்.மயில்வாகனன், ஏ.பி.ஜெ.அப்துல்கலாமின் பேரனும், அறக்கட்டளை நிா்வாகியுமான சேக்சலீம் ஆகியோா் வாழ்த்துரை வழங்குகின்றனா். அப்துல்கலாமின் நெருங்கிய நண்பா்களான மருத்துவா்கள் சந்திரசேகா், ஜோசப்ராஜன் ஆகியோா் கௌரவிக்கப்படுகின்றனா்.

ADVERTISEMENT

நிகழ்ச்சியில் நியூ செஞ்சுரி புத்தக நிறுவன மண்டல மேலாளா் அ.கிருஷ்ணமூா்த்தி நன்றி கூறுகிறாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT