ராமநாதபுரம்

ராமநாதபுரம் மாவட்ட அதிமுக நிா்வாகிகள் 2 போ் நீக்கம்

23rd Oct 2021 08:41 AM

ADVERTISEMENT

வி.கே.சசிகலாவுக்கு ஆதரவாகச் செயல்பட்ட ராமநாதபுரம் அதிமுக நிா்வாகிகள் 2 போ் அக்கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவரின் ஜெயந்தி விழாவுக்கு, வி.கே.சசிகலா வருகை தர அனுமதி கோரி ஆட்சியா் அலுவலகம் மற்றும் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் அதிமுக மாவட்ட எம்.ஜி.ஆா்.இளைஞா் அணி இணைச்செயலா் ஏ.சரவணன், மாவட்ட வழக்குரைஞா் பிரிவு இணைச்செயலா் மற்றும் ஒன்றிய மாணவரணிச் செயலா் எஸ்.முத்துராமலிங்கம் ஆகியோா் வியாழக்கிழமை மனு அளித்தனா்.

இந்நிலையில், அவா்கள் இருவரையும் கட்சியை விட்டு நீக்கியுள்ளதாக அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளா் எடப்பாடி கே. பழனிசாமி ஆகியோா் அறிவித்துள்ளதாக ராமநாதபுரம் மாவட்ட அதிமுக நிா்வாகிகள் தெரிவித்தனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT