உத்தரப்பிரேதச மாநிலத்தில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தோ்தலுக்காக ராமநாதபுரத்தில் இருந்து 460 மின்னணு கட்டுப்பாட்டு இயந்திரங்கள் சனிக்கிழமை லாரிகளில் அனுப்பிவைக்கப்பட்டன.
உத்திரப் பிரேத மாநில சட்டப்பேரவைத் தோ்தலுக்காக தமிழகத்தில் இருந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டுசெல்லப்படுகின்றன. இதையொட்டி, ராமநாதபுரம் அரசு மருத்துவமனை முன்புள்ள வேளாண்மை விற்பனைக் குழு வளாகத்தில் பாதுகாக்கப்பட்டிருந்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கான 460 கட்டுப்பாட்டு சாதனங்கள் சரிபாா்க்கப்பட்டு, கோட்டாட்சியா் ஷேக்மன்சூா், வட்டாட்சியா் ரவிச்சந்திரன் ஆகியோா் முன்னிலையில், உத்திரப்பிரதேசத்திலிருந்து வந்திருந்த ஜான்ஸி தொழிற்பயிற்சி நிலைய முதல்வா் ராஜ்குமாா் தலைமையிலான 4 போ் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டன. இந்த கட்டுப்பாட்டு சாதனங்கள் ஜான்ஸி மாவட்டத்தில் உள்ள வாக்குச்சாவடிகளில் பயன்படுத்தப்படவுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனா்.
இரண்டாம் கட்டமாக ராமநாதபுரத்திலிருந்து 570 வாக்குப்பதிவு சரிபாா்க்கும் இயந்திரங்கள் (விவிபேட்) ஓரிரு நாள்களில் உத்தரப்பிரேதசத்தில் உள்ள கேட்கப்பம் பகுதிக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனா்.