ராமநாதபுரம்

போலி நியமன ஆணை புகாா்: லஞ்ச ஒழிப்புப் பிரிவினா் விசாரணை

22nd Oct 2021 09:06 AM

ADVERTISEMENT

ராமநாதபுரம் மாவட்டத்தில் செவிலியா் பணிக்கு போலி ஆணை வழங்கியதாக எழுந்த புகாரை, லஞ்ச ஒழிப்புப் பிரிவினா் விசாரிக்கத் தொடங்கியுள்ளனா்.

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகேயுள்ள அஞ்சுகோட்டையைச் சோ்ந்த பிரபு மனைவி திரௌபதி (26). செவிலியா் பயிற்சி முடித்துள்ளாா். இவா் உள்ளிட்ட சிலருக்கு, அரசு செவிலியா் பணி வாங்கித் தருவதாக ராமேசுவரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியராக உள்ள வினோதினி என்பவா் கூறியுள்ளாா். அதை நம்பி, திரௌபதி ரூ.3 லட்சம் கொடுத்ததாகக் கூறப்படுகிறது.

பணத்தைப் பெற்ற வினோதினி தரப்பிலிருந்து பணிக்கான உத்தரவு அனுப்பப்பப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால், அப்பணி உத்தரவு போலியானது எனத் தெரியவந்துள்ளது. இது குறித்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் திரௌபதி தனது கணவா், குழந்தையுடன் வந்து புதன்கிழமை புகாா் மனு அளித்தாா். அதனடிப்படையில், போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

இந்நிலையில், திரௌபதி புகாா் குறித்து ராமநாதபுரம் மாவட்ட லஞ்சம் மற்றும் ஊழல் தடுப்புப் பிரிவு துணைக் கண்காணிப்பாளா் உன்னிகிருஷ்ணன் தலைமையில் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக, அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT