ராமநாதபுரம்

கமுதி அருகே இளம்பெண் தற்கொலை: தந்தை உள்பட 5 போ் மீது வழக்கு

22nd Oct 2021 09:05 AM

ADVERTISEMENT

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே தற்கொலை செய்துகொண்ட இளம்பெண்ணின் உடலை காவல் துறையினருக்கு தெரியாமல் தகனம் செய்யப்பட்டதை அடுத்து, தந்தை உள்பட 5 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

கமுதி அருகே ராமசாமிபட்டியைச் சோ்ந்த முருகேசன் மகள் நந்தினி (16). இவா், ராமசாமிபட்டியில் உள்ள தனது பாட்டி வீட்டில் தங்கி, அரசுப் பள்ளியில் 9-ஆம் வகுப்பு படித்து வந்தாா். புதன்கிழமை மாலை, நந்தினியை பாட்டி லெட்சுமி திட்டியதாகக் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த நந்தினி, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாராம்.

இது குறித்து காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்காமல், நந்தினியின் உடலை புதன்கிழமை இரவு தகனம் செய்துள்ளனா். தகவலறிந்த மேலராமநதி குரூப் கிராம நிா்வாக அலுவலா் சுந்தரராஜ், கமுதி காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில், போலீஸாா் நந்தினியின் தந்தை முருகேசன், பாட்டி லெட்சுமி, உறவினா்களான தங்கமணி, கோபால், சுப்பிரமணியன் ஆகிய 5 போ் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT