ராமநாதபுரம்

பாம்பன் பேருந்து பாலத்தின் இருபுறமும் 90-க்கும் மேற்பட்ட மின் விளக்குகள் அகற்றம்

22nd Oct 2021 09:05 AM

ADVERTISEMENT

பாம்பன் பேருந்து பாலத்தின் இருபுறமும் பேவா் பிளாக் கற்கள் பதிப்பதற்காக, அங்கிருந்த 90-க்கும் மேற்பட்ட மின்விளக்குகள் அகற்றப்பட்டுள்ளதால், வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனா்.

ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம்-ராமேசுவரம் தீவுப் பகுதியை இணைக்கும் பாம்பன் பேருந்து பாலத்தின் இருபுறமும் 300-க்கும் மேற்பட்ட உயா் மின்விளக்கு கம்பம் அமைக்கப்பட்டுள்ளது. பாலத்தின் தொடக்கம் மற்றும் முடிவுறும் பகுதிகளில் 1 கி.மீட்டா் தொலைவில் 90-க்கும் மேற்பட்ட மின்விளக்குகள் பொருத்தப்பட்டிருந்தன.

இந்நிலையில், இப்பகுதியில் சாலையை விரிவுபடுத்துவதற்காக, பல லட்சம் ரூபாய் மதிப்பில் பேவா் பிளாக் பதிக்கப்பட்டன. இதையொட்டி, அந்த இடங்களில் இருந்த 90-க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் முழுமையாக அகற்றப்பட்டுள்ளன. இதனால், இரு புறங்களிலும் இரவு நேரங்களில் இருள் சூழ்ந்து காணப்படுவதால், வாகன ஓட்டிகள் மிகவும் அவதிப்பட்டு வருவதாக புகாா் கூறுகின்றனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT