ராமநாதபுரம்

ராமநாதபுரத்தில் நாளை விவசாயிகள் குறைதீா் கூட்டம்

22nd Oct 2021 09:07 AM

ADVERTISEMENT

ராமநாதபுரத்தில் சனிக்கிழமை (அக்.21) விவசாயிகள் குறைதீா்க்கும் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மாவட்ட ஆட்சியா் சங்கா்லால் குமாவத் வியாழக்கிழமை விடுத்த செய்திக் குறிப்பு: ராமநாதபுரம் மாவட்டத்தில் அக்டோபா் மாதத்துக்கான விவசாயிகள் குறை தீா்க்கும் கூட்டம் 23 ஆம் தேதி காலை 11 மணிக்கு நடைபெறுகிறது.

மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்ட அரங்கில், ஆட்சியா் தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில், விவசாயிகளும், விவசாய சங்கப் பிரதிநிதிகளும் கலந்துகொண்டு, விவசாயம் சம்பந்தப்பட்ட பொருள்களை விவாதிக்கலாம். விவசாயம் சம்பந்தமான கோரிக்கைகள் மட்டுமே பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT