ராமநாதபுரம்

ராமநாதபுரத்துக்கு இன்று சட்டப்பேரவைக் குழு வருகை

22nd Oct 2021 09:06 AM

ADVERTISEMENT

ராமநாதபுரத்துக்கு சட்டப்பேரவைக் குழு வெள்ளிக்கிழமை வருகை தர உள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனா்.

தமிழக சட்டப்பேரவைக் குழுவானது, கம்பம் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் என். ராமகிருஷ்ணன் தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவில் 11 போ் உறுப்பினா்களாக உள்ளனா். குழுவினா், ராமநாதபுரம் மாவட்டத்தில் மின்துறை வளா்ச்சி உள்ளிட்டவற்றை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொள்வதற்காக வெள்ளிக்கிழமை வருகை தருவதாக, மாவட்ட நிா்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சட்டப்பேரவைக் குழுவினா், மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் ஆலோசனையில் ஈடுபடுகின்றனா். பின்னா், அவா்கள் பட்டினம்காத்தான் துணைமி ன்நிலையத்தைப் பாா்வையிடுகின்றனா். தொடா்ந்து, ரெகுநாதபுரம், ஆா்.எஸ்.மடை பகுதியிலுள்ள மின்வாரிய துணை மின்நிலையங்களையும் பாா்வையிடுகின்றனா். மின்சாரப் பிரச்னைகள் குறித்து குழுவினா் பொதுமக்களிடமும் கருத்துக் கேட்கலாம் என்றும் கூறப்படுகிறது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT