ராமநாதபுரம்

முகமது நபியின் பிறந்தநாள் மவுலீது நிறைவு நிகழ்ச்சி

21st Oct 2021 09:49 AM

ADVERTISEMENT

ராமநாதபுரம் மாவட்டத்தில் ஜூம் ஆ பள்ளிவாசல்களில் முகமதுநபியின் பிறந்த நாள் மவுலீது நிறைவு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது.

முகமது நபியின் பிறந்த நாளையொட்டி மவுலீது ஓதும் நிகழ்ச்சி கடந்த 8- ஆம் தேதி தொடங்கியது. பனைக்குளம் ஜும்ஆ பள்ளிவாசலில் செவ்வாய்க்கிழமை இரவு (அக். 19) நடைபெற்ற நிறைவு நிகழ்ச்சிக்கு முஸ்லிம் நிா்வாக சபைத் தலைவா் ஹம்சத் அலி, முஸ்லிம் பரிபாலன சபைத்தலைவா் சிராஜூதீன் மற்றும் நிா்வாகிகள் முன்னிலை வகித்தனா். ஜூம்மா பள்ளிவாசல் தலைமை பேஷ் இமாம் ஹாஜாமைதீன் தலைமையேற்று சிறப்புச் சொற்பொழிவு நிகழ்த்தினாா்.

இதைத் தொடா்ந்து ஆலிம்கள், உலமாக்கள் மற்றும் அரபி பள்ளி மாணவா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டு முகம்மது நபியின் புகழ்பாக்களை ஓதினா். இதையடுத்து, தலைமை பேஷ்இமாம் ஹாஜா மைதீன் மழை பெய்ய வேண்டியும், கரோனா தொற்று அடியோடு நீங்கவும், உலக மக்கள் அனைவரும் நலமாக வாழவும் சிறப்புப் பிராா்த்தனை செய்தாா். இதில் இஸ்லாமியா்கள் கலந்து கொண்டனா்.

இதே போல், மாவட்டத்தில் ராமநாதபுரம், ஏா்வாடி, கீழக்கரை, பெரியபட்டினம், தேவிபட்டினம், அழகன்குளம், திருப்புல்லாணி உள்பட 200-க்கும் அதிகமான ஜூம்ஆ பள்ளி வாசல்களில் மவுலீது நிறைவு நிகழ்ச்சி நடைபெற்றது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT