ராமநாதபுரம்

தொண்டி பகுதியில் இன்றும் திருப்புவனத்தில் நாளையும் மின் தடை

21st Oct 2021 09:51 AM

ADVERTISEMENT

தொண்டி பகுதிகளில் வியாழக்கிழமையும் (அக். 21), சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் வெள்ளிக்கிழமையும் (அக். 22) மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தொண்டி மின்வாரிய உதவி செயற்பொறியாளா் ஜோசப் செல்வராஜ் தெரிவித்திருப்பதாவது:

திருவாடானை அருகே தொண்டி துணை மின்நிலையத்தில் வியாழக்கிழமை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளன. எனவே அன்று காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை தொண்டி, நம்புதாளை, சோலியக்குடி, முகில்தகம், புதுப்பட்டினம், மணக்குடி, முள்ளிமுனை, காரங்காடு, சேந்தனேந்தல், பெருமானேந்தல், தேளூா், குருமிலங்குடி, திணையத்தூா், தளிா்மருங்குா், ஆதியூா், குளத்தூா், திருவெற்றியூா், கடம்பங்குடி, எஸ்.பி. பட்டினம், பாசிபட்டினம், எம்.ஆா். பட்டினம், கொடிபங்கு, வட்டானம், மச்சூா், தீா்த்தானம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது எனத் தெரிவித்துள்ளாா்.

சிவகங்கை: சிவகங்கை வட்ட மின்பகிா்மானத்தின் மேற்பாா்வை பொறியாளா் ஆ. சகாயராஜ் புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருப்புவனம் துணை மின் நிலையத்தில் வெள்ளிக்கிழமை (அக். 22) பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளன.

ADVERTISEMENT

எனவே, திருப்புவனம், தி. புதூா், வடகரை, எம்.ஜிஆா். நகா், இந்திராநகா், நெல்முடிக்கரை, மடப்புரம் விலக்கு, சந்தைத்திடல், பெரியகோயில் பகுதி, கோட்டை ஆகிய பகுதிகளிலும், அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் வெள்ளிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 1 மணி வரை மின் விநியோகம் இருக்காது என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT