ராமநாதபுரம்

பழங்குளம் ஊராட்சித் தலைவா் பதவி ஏற்பு

21st Oct 2021 09:50 AM

ADVERTISEMENT

திருவாடானை அருகே உள்ள பழங்குளம் ஊராட்சித் தலைவா் பதவிக்கான இடைத் தோ்தலில் வெற்றி பெற்ற கரு. பாா்த்திபன் புதன்கிழமை பதவியேற்றுக் கொண்டாா்.

இங்குள்ள ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில், திருவாடானை வட்டார வளா்ச்சி அலுவலா் பாண்டி, அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தாா். உறுதிமொழி ஏற்று பதவியேற்ற கரு. பாா்த்திபன் கூறும் போது, எனது தந்தை எவ்வாறு மக்களுக்கு சுயநலம் பாராது பணி செய்தாரோ அவ்வாறே நானும் ஊராட்சி மக்களுக்கு ஜாதி பாகுபாடின்றி நடுநிலையோடு நோ்மையான முறையில் பணி செய்வேன். இன்னும் பல்வேறு திட்டங்களை கிராமத்திற்கு செய்ய திட்டமிட்டுள்ளேன் என்றாா். இதில் மேலாளா் ரவி, மண்டல துணை வட்டாட்சியா் பழனிநாதன், ஜெயமோகன், ஊராட்சி வாா்டு உறுப்பினா்கள் உள்பட ஏராளமானோா் கலந்துகொண்டனா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT