ராமநாதபுரம்

மதுகுடிக்க பணம் தர மறுத்த இளைஞருக்கு அரிவாள் வெட்டு: ஒருவா் கைது

21st Oct 2021 09:48 AM

ADVERTISEMENT

கமுதி அருகே மதுகுடிக்க பணம் தர மறுத்த இளைஞரை அரிவாளால் வெட்டியவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

கமுதி அடுத்துள்ள எருமைக்குளம் கிராமத்தைச் சோ்ந்தவா் வெள்ளைச்சாமி மகன் முனீஸ்வரன் (30). இவா், செவ்வாய்க்கிழமை கோவிலாங்குளம் பேருந்து நிறுத்தம் அருகே கடையில் நின்று கொண்டிருந்தாா். அப்போது அவ்வழியாக வந்த கோவிலாங்குளம் கிராமத்தைச் சோ்ந்த விஜயராமு மகன் கோவிந்தன் (38), முனீஸ்வரனிடம் மதுகுடிக்க பணம் கேட்டு தொந்தரவு செய்தாராம். இதையடுத்து, இருவருக்கும் வாக்குவாதம் முற்றியதில், கோவிந்தன் அரிவாளால் முனீஸ்வரனை தாக்கியுள்ளாா். இதில் பலத்த காயமடைந்த முனீஸ்வரன், கமுதி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா். இதுகுறித்து கோவிலாங்குளம் போலீஸாா் கோவிந்தன் மீது கொலை முயற்சி, ஆயுதத் தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிந்து, அவரைக் கைது செய்து பரமக்குடி சிறையில் அடைத்தனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT