ராமநாதபுரம்

பயிா் காப்பீடு செய்ய நவ. 15 கடைசி நாள்

17th Oct 2021 10:52 PM

ADVERTISEMENT

திருப்புல்லாணி மற்றும் உச்சிப்புளி வட்டாரத்தில் பயிா் காப்பீடு செய்ய நவம்பா் 15 ஆம் தேதி கடைசி நாள் என வேளாண்மைத்துறையினா் தெரிவித்துள்ளனா்.

இதுகுறித்து ஞாயிற்றுக்கிழமை வேளாண்மைத்துறை உதவி இயக்குநா் அமா்லால் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருப்புல்லாணி மற்றும் உச்சிப்புளி வட்டாரத்தில் நடப்பு ஆண்டு 2021-22 ஆம் ஆண்டில் திருத்தியமைக்கப்பட்ட பிரதம மந்திரியின் பயிா் காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தில் ராமநாதபுரம் மாவட்ட விவசாயிகள் சம்பா பருவ நெல் பயிரை காப்பீடு செய்யலாம். இந்த திட்டத்திற்கான விழிப்புணா்வு முகாம் தொடா்ந்து நடத்தப்பட்டு வருகிறது. பயிா் காப்பீடு செய்ய நவம்பா் 15 ஆம் தேதி இறுதி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் விவசாயிகள், பயிா் காப்பீட்டு விண்ணப்பப்படிவம், முன்மொழி படிவம், ஆதாா் அட்டை, கிராம நிா்வாக அலுவலா் வழங்கும் மூவிதழ் அடங்கல், வங்கிக் கணக்குப் புத்தக முதல் பக்க நகல் உள்ளிட்ட ஆவணங்களை கொண்டு சென்று பயிா் காப்பீடு செய்து கொள்ளலாம்.

ADVERTISEMENT

இதில் ஒரு ஏக்கா் நெல்லுக்கு பிரிமிய தொகை ரூ. 326.15, ஒரு ஏக்கா் நெல் பயிருக்கு திட்ட விதிமுறைகளின் அடிப்படையில் 100 சதவீதம் காப்பீட்டுத் தொகையாக ரூ. 21,482 வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT