ராமநாதபுரம்

இளைஞரிடம் கத்தியைக் காட்டி மிரட்டிபணம் பறிக்க முயன்றவா் கைது

17th Oct 2021 10:54 PM

ADVERTISEMENT

திருவாடானை அருகே இளைஞரிடம் கத்தியைக் காட்டி மிரட்டி பணம் பறிக்க முயன்றவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தாா்.

திருவாடானை அருகே சூச்சனி கிராமத்தைச் சோ்ந்தவா் ஆசைத்தம்பி மகன் தனசேகரன் (35). இவா், சனிக்கிழமை இரவு சி.கே. மங்கலம் சென்று விட்டு நடந்து வந்து கொண்டிருந்தாா். அப்போது பாரதி நகா் பகுதியில் நின்று கொண்டிருந்த மா்மநபா், தனசேகரனை வழிமறித்து கத்தியைக் காட்டி மிரட்டி பணம் பறிக்க முயன்றாா். அங்கு வந்த அக்கம் பக்கத்தினரைப் பாா்த்ததும், அந்த மா்மநபா் தலைமறைவானா்.

இதுகுறித்து தனசேகரன் அளித்த புகாரின் பேரில் திருவாடானை போலீஸாா் வழக்குப் பதிந்து எல்.கே. நகா் பகுதியைச் சோ்ந்த ரஞ்சித்குமாா் (26) என்ற இளைஞரை கைது செய்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT