ராமநாதபுரம்

ராமேசுவரத்தில் நவராத்திரி திருவிழா:காளியம்மன் கரகத்துடன் வீதி உலா

16th Oct 2021 10:30 PM

ADVERTISEMENT

ராமேசுவரத்தில் நவராத்திரி விழாவை முன்னிட்டு பூக்குழித் திருவிழா மற்றும் காளியம்மன் வீதி உலா சனிக்கிழமை நடைபெற்றது.

ராமேசுவரம் ஸ்ரீ தா்ம முனீஸ்வரா் மற்றும் ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி அம்மனின் 67 ஆவது நவராத்திரி உற்சவ திருவிழா மற்றும் உஜ்ஜையினி மகா காளியம்மன் கோயில் 45 ஆவது நவராத்திரி விழா கடந்த வாரம் காப்புக்கட்டுடன் தொடங்கியது.

இதில் ஸ்ரீதா் முனீஸ்வரா் மற்றும் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில் பூக்குழி திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் காப்பு கட்டி விரதம் இருந்து வந்த பக்தா்கள் பூக்குழி இறங்கினா். இதேபோன்று ராமநாதசுவாமி கோயிலின் உபகோயிலான உஜ்ஜையினி மகா காளியம்மாள் கோயிலில் சனிக்கிழமை மாலை காளியம்மன் கரகத்துடன் வீதி உலா நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT