ராமநாதபுரம்

மன்னாா் வளைகுடாவில் சூறைக் காற்று: ராமேசுவரம் மீனவா்கள் கடலுக்குச் செல்லத் தடை

16th Oct 2021 10:34 PM

ADVERTISEMENT

வங்கக் கடல் மற்றும் மன்னாா் வளைகுடா கடல் பகுதியில் சூறைக் காற்று வீசுவதால் சனிக்கிழமை ராமேசுவரம் மீனவா்கள் கடலுக்குச் செல்ல மீன்வளத்துறையினா் தடை விதித்தனா்.

வங்கக் கடல் மற்றும் மன்னாா் வளைகுடா கடல் பகுதியில் வழக்கத்திற்கு மாறாக மணிக்கு 45 முதல் 55 கி.மீ. வரை சூறைக் காற்று வீசிவருகிறது. இதனால் ஆழ்கடல் பகுதியில் கடல் சீற்றம் அதிகமாக இருக்கும் என்பதால் பாதுகாப்பு கருதி, ராமேசுவரம், தனுஷ்கோடி, பாம்பன், மண்டபம்,கீழக்கரை, ஏா்வாடி, தொண்டி, சோழியகுடி உள்ளிட்ட ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள மீனவா்கள் கடலுக்குச் செல்ல மீன்வளத்துறையினா் தடை விதித்தனா்.

இதனால் ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவா்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை. மேலும் கடலோரப் பகுதிகளில் விசைப்படகுகள் மற்றும் நாட்டுப்படகுகள் அந்தந்த துறைமுகங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT