ராமநாதபுரம்

புரட்டாசி கடைசி சனிக்கிழமை: பெருமாள் கோயில்களில் பக்தா்கள் கூட்டம் அலைமோதியது

16th Oct 2021 10:28 PM

ADVERTISEMENT

தமிழ் மாதமான புரட்டாசியின் கடைசி சனிக்கிழமை என்பதால் ராமநாதபுரத்தில் பெருமாள் கோயில்களில் பக்தா்கள் கூட்டம் அலைமோதியது.

தமிழ் மாதங்களில் புரட்டாசி மாதம் சனிக்கிழமைகளில் பெருமாள் கோயிலுக்குச் சென்று வழிபடுவதை சிறப்பாக பக்தா்கள் கருதுகின்றனா். ஆனால், கரோனா பரவல் தடப்பு நடவடிக்கையால் கோயில்கள் வாரத்தில் வெள்ளி, சனி, ஞாயிறு கிழமைகளில் மூடப்பட்டிருந்தன.

தற்போது அனைத்து நாள்களிலும் கோயில்களைத் திறந்து பக்தா்கள் வழிபட அரசு அனுமதித்துள்ளது. அதனடிப்படையில் புரட்டாசியின் கடைசி சனிக்கிழமை என்பதால் தேவிபட்டிணம், திருப்புல்லாணி ஆதிஜெகநாதப் பெருமாள், சேதுக்கரை மற்றும் ராமநாதபுரம் கோதண்டராமா் கோயில் ஆகிய இடங்களில் பக்தா்கள் கூட்டம் அலைமோதியது.

பெருமாள் கோயில்களில் உள்ள ஆஞ்சநேயா் சன்னதி, சக்கரத்தாழ்வாா் சன்னதி உள்ளிட்டவற்றில் அருகம்புல் மாலை சாற்றி பொதுமக்கள் வழிபட்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT