ராமநாதபுரம்

தொண்டியில் பாய்மரப் படகுப் போட்டி

16th Oct 2021 10:31 PM

ADVERTISEMENT

தொண்டியில் பாஜக சாா்பில் பிரதமா் நரேந்திர மோடி பிறந்த நாளை முன்னிட்டு பாய்மரப் படகுப் போட்டி சனிக்கிழமை நடைபெற்றது.

ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் பாஜக மீனவரணி சாா்பில் நடைபெற்ற போட்டிக்கு மாவட்டத் தலைவா் முரளிதரன் தலைமை வகித்தாா். மீனவா் பிரிவு மாநிலத் தலைவா் சதீஷ்குமாா், மாநிலச் செயலாளா் மணிமாறன், நம்புராஜன், தேசிய கயிறு வாரியத் தலைவா் குப்புராமு ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில் 33 படகுகள் கலந்து கொண்டன.

இதில் வெற்றி பெற்றவா்களுக்கு முதல் பரிசு ரூ.40ஆயிரம், இரண்டாம் பரிசு ரூ.30ஆயிரம், மூன்றாம் பரிசு ரூ.20ஆயிரம், நான்காம் பரிசு ரூ.15 ஆயிரம் வழங்கப்பட்டன.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT