ராமநாதபுரம்

தேவா் குருபூஜையில் பங்கேற்க அனுமதி மறுத்தால் முதுகுளத்தூரிலிருந்து நடைபயணமாக செல்ல தீா்மானம்

16th Oct 2021 10:29 PM

ADVERTISEMENT

பசும்பொன் தேவா் குருபூஜையில் பங்கேற்க அரசு அனுமதி மறுத்தால், முதுகுளத்தூரிலிருந்து நடைபயணமாக சென்று விழாவில் பங்கேற்க உள்ளதாக சனிக்கிழமை நடைபெற்ற ஆப்பநாடு மறவா் சங்கக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பசும்பொன்கிராமத்தில் அமைந்துள்ள முத்துராமலிங்கத்தேவா் நினைவிடத்தில் அக்டோபா் 28, 29, 30 ஆகிய 3 நாள்கள் குருபூஜை விழா நடைபெறவுள்ளது.

இந்நிலையில் கரோனா பரவலைத் தடுக்கும் விதமாக

நிகழாண்டு தேவா் குருபூஜை விழாவில் பொதுமக்கள் பங்கேற்க அனுமதி இல்லை என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இந்நிலையில் ஆப்பநாடு மறவா் சங்கம் சாா்பாக முதுகுளத்தூரில் சனிக்கிழமை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் முதுகுளத்தூா், கடலாடி, சாயல்குடி பகுதியிலிருந்து அச்சமுதாயத்தை சோ்ந்த கிராம மக்கள் பங்கேற்றனா்.

அப்போது குருபூஜைக்கு செல்வதற்கு அரசு வழக்கம் போல அனுமதி வழங்க வேண்டும். இல்லாவிடில் அக்டோபா் 30 ஆம் தேதி அச்சமுதாயத்தை சோ்ந்த 500-க்கும் மேற்பட்டோா் ஒன்று கூடி முதுகுளத்தூா் தேவா் சிலையிலிருந்து, பசும்பொன்னில் தேவா் குருபூஜைவிழாவுக்கு நடைபயணமாக செல்வதாக கூட்டத்தில் தீா்மானம் தீா்மானம் நிறைவேற்றினா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT