ராமநாதபுரம்

சூறைக்காற்று: ராமநாதபுரத்தில் மரங்கள் முறிந்து விழுந்தன

16th Oct 2021 10:37 PM

ADVERTISEMENT

ராமநாதபுரத்தில் சனிக்கிழமை வீசிய சூறைக்காற்றால் பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன.

ராமநாதபுரம் கடல் பகுதியில் மணிக்கு சுமாா் 45 கிலோ மீட்டா் வேகத்தில் காற்று வீசும் என வானிலை மையம் அறிவித்திருந்தது. இதனால் ராமேசுவரம், பாம்பன் உள்ளிட்ட அனைத்துப் பகுதி மீனவா்களும் கடலுக்குச் செல்லவில்லை.

இந்நிலையில், சனிக்கிழமை காலையில் ராமநாதபுரம் நகா் மற்றும் ஊரகப் பகுதிகளில் திடீரென சூறைக்காற்று வீசியது. இதனால் வண்டிக்காரத் தெருவில் நகராட்சி அலுவலகம் அருகேயுள்ள புங்கை மரம் முறிந்து சாலையில் விழுந்தது. இதனால், நீண்டநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்த பஜாா் காவல் நிலையப் போலீஸாா் விரைந்து வந்து போக்குவரத்தை மாற்றுப்பாதைக்கு திருப்பி விட்டனா். பின்னா் போலீஸாா் மரக்கிளைகளை வெட்டி அகற்றும் பணியில் ஈடுபட்டனா். பின்னா் இந்த சாலையில் வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட்டன.

இதேபோல் ராமநாதபுரம் பட்டினம்காத்தானில் வனத்துறை அலுவலகம் முன்பாக சாலையோர மரத்தின் பெரிய கிளைகள் முறிந்து விழுந்தன. இதேபோல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மரங்கள் முறிந்து விழுந்ததாக வனத்துறையினா் தெரிவித்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT