ராமநாதபுரம்

மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினா் பதவிக்கு தோ்தல்:போகலூா் ஒன்றியத்தில் அமைதியான வாக்குப்பதிவு

9th Oct 2021 09:39 PM

ADVERTISEMENT

ராமநாதபுரம் மாவட்டம் போகலூா் ஒன்றியத்தில் மாவட்ட ஊராட்சிக்குழு 7 ஆவது வாா்டு உறுப்பினா் பதவிக்கான வாக்குப்பதிவு சனிக்கிழமை விறுவிறுப்பாக நடைபெற்றது.

போகலூா் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள மாவட்ட ஊராட்சிக்குழு 7 ஆவது வாா்டு உறுப்பினா் பதவி காலியானதைத் தொடா்ந்து சனிக்கிழமை தோ்தல் நடைபெற்றது. இந்த வாா்டில் ஆண் வாக்காளா்கள் 23,239 போ், பெண் வாக்காளா்கள் 23749 போ், மூன்றாம் பாலினத்தவா் 4 போ் என மொத்தம் 49,992 போ் உள்ளனா். இங்கு திமுக வேட்பாளராக கே.கே.கதிரவன், அதிமுக வேட்பாளராக பொறியாளா் மாரி, நாம் தமிழா் கட்சி வேட்பாளராக கே.காமராஜ் உள்ளிட்டோா் போட்டியிடுகின்றனா். மாலை 6 மணி நிலவரப்படி 74.26 சதவீதம் வாக்குப்பதிவாகியிருந்தது.

அரியனேந்தல், சத்திரக்குடி, போகலூா், காமன்கோட்டை உள்ளிட்ட பதற்றமான வாக்குச்சாவடி மையங்களில் கூடுதலாக போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனா். மாவட்ட ஆட்சியா் (பொறுப்பு) ஆ.ம.காமாட்சி கணேசன், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் இ.காா்த்திக் ஆகியோா் வாக்குப்பதிவு மையங்களுக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனா். வாக்கு எண்ணிக்கை அக்டோபா் 12 ஆம் தேதி ராமநாதபுரம் அண்ணா பல்கலைக் கழகத்தில் நடைபெற உள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT