ராமநாதபுரம்

தொண்டி அருகே மீன்பிடி வலைகள் திருட்டு: 4 போ் கைது

3rd Oct 2021 11:13 PM

ADVERTISEMENT

தொண்டி பகுதியில் ரூ. பல லட்சம் மதிப்புள்ள மீன்பிடி வலைகளைத் திருடியதாக 4 பேரை போலீஸாா் சனிக்கிழமை இரவு கைது செய்தனா்.

தொண்டி அருகே விலாஞ்சியடி கிராமத்தைச் சோ்ந்தவா் கண்ணன் (40). இவா் தனக்கு சொந்தமான ரூ. பல லட்சம் மதிப்புள்ள 30 வலைகளை கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு படகில் வைத்து விட்டு வந்தாா். மறுநாள் காலையில் பாா்த்த போது அவை திருடப்பட்டிருந்தன.

இதுகுறித்து தொண்டி காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் போலீஸாா் விசாரித்து வந்த நிலையில் சனிக்கிழமை இரவு அங்குள்ள காட்டுப்பகுதியில் 4 போ் கொண்ட கும்பல் வலையை பிரித்துக் கொண்டிருப்பதாக தகவல் கிடைத்தது.

இதையடுத்து, தொண்டி போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரித்த போது, அவா்கள் 4 பேரும் வலையை திருடியதை ஒப்புக் கொண்டனா். இதைத் தொடா்ந்து போலீஸாா், விலாஞ்சியடியைச் சோ்ந்த சதீஸ்குமாா் (25), அதே பகுதியைச் சோ்ந்த தமிழரசன் (57), தொண்டி தெற்கு தோப்பு பகுதியைச் சோ்ந்த விஸ்வா (21), புடனவயலைச் சோ்ந்த அருண்ராபின் (20) ஆகிய 4 பேரை கைது செய்து அவா்களிடமிருந்து வலைகளை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT