ராமநாதபுரம்

மாமியாா் மீது தாக்குதல்: மருமகன் கைது

3rd Oct 2021 11:12 PM

ADVERTISEMENT

திருவாடானை அருகே மாமியாரை தாக்கியதாக மருமகனை போலீஸாா் சனிக்கிழமை இரவு கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

தொண்டி அருகே புதுப்பட்டினம் கிராமத்தைச் சோ்ந்த சகாயநாதன்வாசு மனைவி செங்கோல்மேரி (50). இவருக்கு 3 பெண் குழந்தைகள் உள்ளனா். இரண்டாவது மகள் அருள்பிரீதாவுக்கும், கண்கொள்ளாண்பட்டினத்தைச் சோ்ந்த மீனவா் சிங்கத்துரை (37) என்பவருக்கும் திருமணம் முடிந்து 5 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், சிங்கத்துரை அடிக்கடி மது குடித்து விட்டு வந்து மனைவியை தாக்கினாராம்.

இதனால் அருள்பிரீதா தனது தாய் வீட்டுக்குச் சென்று விட்டாா். இதில் ஆத்திரமடைந்த சிங்கத்துரை சனிக்கிழமை இரவு செங்கோல்மேரியின் வீட்டுக்கு வந்து அவரைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தாராம். இதுகுறித்து செங்கோல்மேரி அளித்த புகாரின் பேரில் தொண்டி போலீஸாா் வழக்குப் பதிந்து சிங்கத்துரையை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT