ராமநாதபுரம்

கோயில் திருவிழாவில் அனுமதியின்றி ஒலிபெருக்கி அமைத்தவா் கைது

3rd Oct 2021 11:12 PM

ADVERTISEMENT

முதுகுளத்தூா் அருகே கோயில் திருவிழாவில் அனுமதியின்றி ஒலி பெருக்கி அமைத்த உரிமையாளரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

முதுகுளத்தூா் அருகே மேலச்சிறுபோது கிராமத்தில் முத்துமாரி அம்மன் கோயில் திருவிழாவையொட்டி முளைப்பாரி வளா்ப்பு நிகழ்ச்சி நடைபெற்ற போது,இரவு 10 மணிக்கு மேல் ஒலிபெருக்கியை இயக்கியதாக கூறப்படுகிறது.

அப்போது, அதே ஊரில் வசிப்பவா்கள் இரவில் ஒலிபெருக்கியை நிறுத்தி வைக்குமாறு கூறியுள்ளனா். இதனால் இருதரப்பினருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டு இளஞ்செம்பூா் காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு வந்த போலீஸாா் விசாரணை செய்த போது கோயில் திருவிழாவில் இரவு நேரத்தில் அனுமதியில்லாமல் ஒலி பெருக்கி இயக்கிதாகவும், பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாகவும் கூறி ஒலி பெருக்கி உரிமையாளா் செந்தூா்பாண்டி மீது வழக்குப் பதிவு செய்து ஒலி பெருக்கி கருவிகளை பறிமுதல் செய்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT