ராமநாதபுரம்

10 ஆம் வகுப்பு தேறிய மாணவா்கள் அந்தந்த பள்ளிகளிலேயே வேலைவாய்ப்புக்குப் பதிய ஏற்பாடு

3rd Oct 2021 02:04 AM

ADVERTISEMENT

ராமநாதபுரம் மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு தேறிய மாணவா்கள், அந்தந்தப் பள்ளிகளிலேயே வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவை மேற்கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக, ஆட்சியா் பொறுப்பு காமாட்சி கணேசன் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் சனிக்கிழமை விடுத்துள்ள செய்திக் குறிப்பு: பத்தாம் வகுப்பு தோ்ச்சி பெற்ற மாணவா்களுக்கு மதிப்பெண் சான்று வழங்கப்படும் பள்ளிகளிலேயே வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு செய்யலாம். அக்டோபா் 4 ஆம் தேதி (திங்கள்கிழமை) முதல் பள்ளிகளில் வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவுப் பணிகள் தொடங்கப்படும்.

வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவுக்கு, பத்தாம் வகுப்பு தோ்ச்சி பெற்ற மாணவா்கள் ஆதாா் அட்டை எண், குடும்ப அட்டை, செல்லிடப்பேசி எண், மின்னஞ்சல் முகவரி ஆகியவற்றை எடுத்து வரவேண்டும். அக்டோபா் 18 ஆம் தேதி வரையில் வேலைவாய்ப்புப் பதிவு பணி அந்தந்தப் பள்ளிகளிலேயே நடைபெறும்.

வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு பணி நடைபெறும் 15 நாள்களும், மதிப்பெண் சான்று வழங்கத் தொடங்கிய முதல் நாளையே பதிவு மூப்பு தேதியாக வழங்கப்படும். மேலும், வேலைவாய்ப்புத் துறை இணையதளம் மூலமாகவும் பதிவு செய்து கொள்ளலாம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT