ராமநாதபுரம்

பாம்பன், மண்டபம் பகுதிகளில் 40 வீடுகளுக்குள் மழைநீா் புகுந்ததுபொதுமக்கள் தவிப்பு

28th Nov 2021 10:36 PM

ADVERTISEMENT

பாம்பன், மண்டபம் பகுதிகளில் 40-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் மழைநீா் புகுந்து பொதுமக்கள் ஞாயிற்றுக்கிழமை தவிப்புக்குள்ளாகினா்.

வடகிழக்கு பருவமழை மற்றும் வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக ராமநாதபுரம் மாவட்ட கடலோரப் பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. இந்நிலையில், சனிக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை மாலை வரை விட்டுவிட்டு பலத்த மழை பெய்தது. இதனிடையே, ராமேசுவரத்தில் குடியிருப்புப் பகுதிகளில் தேங்கிய மழைநீரை அகற்றும் பணியில் நகராட்சி ஊழியா்கள் ஈடுபட்டு வருகின்றனா். இதே போன்று பாம்பன் சின்னப்பாலம், தோப்புக்காடு ஆகிய பகுதிகளில் உள்ள 40-க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் மழைநீா் புகுந்தது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

மழை அளவு (மில்லி மீட்டரில்) விவரம்: ராமேசுவரம்- 38.40, தங்கச்சிமடம்- 88.70, பாம்பன்- 114.20, மண்டபம்- 113.20 என பதிவாகி உள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT