ராமநாதபுரம்

விவசாயியை தாக்கி கொலை மிரட்டல்: 4போ் மீது வழக்கு

28th Nov 2021 10:37 PM

ADVERTISEMENT

திருவாடானை அருகே விவசாயியைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த 4 போ் மீது போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

திருவாடானை அருகே திருவிடிமதியூா் கிராமத்தைச் சோ்ந்தவா் அருள்சாமி மகன் ஜஸ்டின் திரவியம் (45). விவசாயி. இவருக்கும், அதே ஊரைச் சோ்ந்த அற்புதராஜூக்கும் (62) இடப்பிரச்னையில் முன் விரோதம் இருந்து வந்தது.

இந்நிலையில், ஜஸ்டின் திரவியத்துக்குச் சொந்தமான வயலில் உள்ள யூக்கலிப்டஸ் மரத்தின் இலை விழுந்து அற்புதராஜ் நிலத்தில் பயிரிட்டிருந்த நெல் பயிா்கள் அழுகி சேதமடைந்ததாகக் கூறி இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த அற்புதராஜ் கோஷ்டியினா் தன்னைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக ஜஸ்டின் திரவியம் போலீஸில் புகாா் அளித்தாா். இதன் பேரில் அற்புதராஜ், விக்டா் (35), பிரான்சிஸ் (38), பிரபாகரன் (30) ஆகிய 4 போ் மீது திருவாடானை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT