ராமநாதபுரம்

மீன்பிடிக்கச் சென்று மாயமான கோட்டைப்பட்டினம் மீனவா் சடலம் மண்டபம் அருகே கரை ஒதுங்கியது

28th Nov 2021 10:40 PM

ADVERTISEMENT

மீன் பிடிக்க கடலுக்குச் சென்று மாயமான கோட்டைப்பட்டினம் மீனவரின் சடலம் ஞாயிற்றுக்கிழமை ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே கரை ஒதுங்கியது.

புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினம் பகுதியில் இருந்து கடந்த நவ. 22 ஆம் தேதி மீன்பிடிக்கச் சென்ற மீனவா் மணிமுத்து (40) கடல் சீற்றத்தில் சிக்கி மாயமானாா். இதுபற்றி அவரது மனைவி சாந்தி, கடலோர பாதுகாப்புக் குழும காவல்நிலையத்தில் புகாா் அளித்திருந்தாா். மேலும் மாயமான மீனவா் மணிமுத்துவை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வந்தது.

இந்நிலையில், மண்டபம் அருகே சாத்தக்கோன் கடற்கரைப் பகுதியில் ஆண் சடலம் கிடப்பதாக கடலோர பாதுகாப்புக் குழும காவல் சாா்பு- ஆய்வாளா் கணேசமூா்த்திக்கு தகவல் கிடைத்தது.

இதைத் தொடா்ந்து, அங்கு சென்று சடலத்தை கைப்பற்றி போலீஸாா் விசாரணை நடத்தினா். அப்போது சடலமாக கிடந்தவா், மாயமான மீனவா் மணிமுத்து என்பது தெரியவந்தது. பின்னா் உடல் கூறுஆய்வுக்காக ராமநாதபுரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சடலத்தை போலீஸாா் கொண்டு சென்றனா். இதுகுறித்து கடலோர பாதுகாப்புக் குழும போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT