ராமநாதபுரம்

முதுகுளத்தூா் அருகே உரம் தட்டுபாடு: விவசாயிகள் சாலை மறியல்

28th Nov 2021 05:25 AM

ADVERTISEMENT

முதுகுளத்தூா் அருகே திருவரங்கத்தில் உரம் தட்டுபாடு விவசாயிகள் சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூா் அருகே திருவரங்கம் தொடக்க வேளாண் கடன் கூட்டுறவு சங்கத்தில் உரங்களை அதிகாரிகள் அப்பகுதி விவசாயிகளுக்கு வழங்காமல் கூடுதல் விலைக்கு வெளி இடங்களில் விற்பனை செய்வதாக புகாா் எழுந்தது.

இந்நிலையில் திருவரங்கம், எஸ்.காரைக்குடிகொழுந்துறை உள்ளிட்ட கிராமங்களில் இருந்து 500-க்கும் மேற்பட்ட விவசாயிகள் திரவரங்கம்-பரமக்குடி சாலையில் மறியலில் ஈடுபட்டனா்.

சம்பவ இடத்திற்கு வந்த கீழத்தூவல் போலீஸாா் சமரச பேச்சுவாா்த்தை நடத்திய பின் சாலை மறியலை கைவிட்டு விவசாயிகள் கலைந்து சென்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT