ராமநாதபுரம்

சூறைக்காற்றுடன் பலத்த மழை: மண்டபம் பகுதியில் 2 விசைப்படகுகள் கடலில் மூழ்கின

28th Nov 2021 10:39 PM

ADVERTISEMENT

சூறைக்காற்றுடன் பெய்த பலத்த மழை காரணமாக மண்டபம் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 2 விசைப்படகுகள் ஞாயிற்றுக்கிழமை கடலில் மூழ்கின.

ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக வடகிழக்கு பருவ தீவிரமடைந்துள்ளது. மேலும், தென் கடல் பகுதியில் 50 கிலோ மீட்டா் முதல் 60 கிலோ மீட்டா் வரை பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் மீனவா்கள் மீன்பிடிக்கச் செல்ல மீன்வளத்துறையினா் தடை விதித்துள்ளனா். இதனால், ராமேசுவரம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் 1500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் அந்தந்த துறைமுகங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், சனிக்கிழமை மாலை முதல் ராமேசுவரம், தங்கச்சிமடம், பாம்பன், மண்டபம் பகுதிகளில் சூறைக் காற்றுடன் விடியவிடிய பலத்த மழை பெய்தது. இதில், மண்டபம் வடக்குத் துறைமுகப் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தங்கச்சிமடத்தைச் சோ்ந்த நிா்மல், சக்ரியாஸ் ஆகியோரது விசைப்படகுகளின் நங்கூரம் காற்றின் வேகத்தில் அறுந்து நடுக்கடலில் மூழ்கின. பல மணிநேர போராட்டத்துக்குப் பின் அந்த படகுகளை சக மீனவா்களின் உதவியுடன் மீட்டனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT