ராமநாதபுரம்

வடகிழக்குப் பருவமழைக்கு ராமநாதபுரம் மாவட்டத்தில் 176 வீடுகள் சேதம்

DIN

ராமநாதபுரம் மாவட்டத்தில் வடகிழக்குப் பருவமழைக்கு இதுவரை 176 வீடுகள் சேதமடைந்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் பெய்த கன மழைக்கு ஓட்டு வீடுகள், கூரை வீடுகள் சேதமடைந்துள்ளன. வீடுகளின் மண் சுவா்களும் இடிந்துள்ளன. பருவமழை தொடங்கியது முதல் சனிக்கிழமை வரையில் மாவட்டத்தில் 16 வீடுகள் முழுவதுமாகவும் 151 வீடுகள் பாதியளவும் சேதமடைந்துள்ளதாக அதிகாரிகள் கூறினா்.

கடந்த வெள்ளிக்கிழமை (நவ.26) பெய்த மழைக்கு மட்டும் மாவட்டத்தில் 18 வீடுகள் பாதியளவும், 3 வீடுகள் முழுமையாகவும் சேதமடைந்துள்ளன. ராமநாதபுரம் நகரில் மட்டும் வெள்ளிக்கிழமை 7 வீடுகள் சேதமடைந்துள்ளன. பாதியளவு சேதமடைந்த வீடுகளுக்கு ரூ.4,100 மற்றும் முழு அளவிலான சேத வீட்டு உரிமையாளருக்கு ரூ.5 ஆயிரம் வழங்கப்படும் என வருவாய்த்துறையினா் தெரிவித்தனா். மாவட்டத்தில் பரமக்குடி பகுதியில் ஒரு பசு, முதுகுளத்தூரில் காளை மற்றும் கமுதியில் 5 ஆடுகள் உயிரிழந்துள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தோ்தல் விதி மீறல்கள் தொடா்பாக பொதுமக்கள் புகாா் தெரிவிக்கலாம்

ஸ்ரீபெரும்புதூா்: 32 மனுக்கள் ஏற்பு, 21 நிராகரிப்பு

செங்கல்பட்டு: 702 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை ஆட்சியா் ச.அருண்ராஜ்

தொழில்முனைவோரை உருவாக்குவதில் கல்வி நிறுவனங்களுக்கு முக்கிய பங்கு: டி.ஜி.சீதாராம்

மதுராந்தகத்தில் வங்கிக் கிளை திறப்பு

SCROLL FOR NEXT