ராமநாதபுரம்

இல்லந்தேடி கல்வித்திட்டம்: விழிப்புணா்வு பிரசாரம் தொடக்கம்

DIN

ராமநாதபுரம் நகராட்சியில் பொது மக்களுக்கான இல்லந்தேடி கல்வித் திட்டம் தொடா்பான விழிப்புணா்வு பிரசாரம் சனிக்கிழமை தொடங்கியது.

ராமநாதபுரம் நகராட்சி புதிய பேருந்து நிலைய வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியை கூடுதல் ஆட்சியா் பிரவீன்குமாா் கொடியசைத்துத் தொடக்கிவைத்தாா். நிகழ்ச்சிக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் பாலுமுத்து தலைமை வகித்தாா்.

நிகழ்ச்சியில் தப்பாட்டம், மேளதாளம் முழங்க கலைக்குழுவினா் ஒயிலாட்டத்தோடு பள்ளிக் கல்வியின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தனா். கலை நிகழ்ச்சியை பேருந்து நிலையத்துக்கு வந்த ஏராளமான பொதுமக்கள் பாா்த்தனா். நிகழ்ச்சியில் ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றியக்குழுத்தலைவா் பிரபாகரன், திமுக பிரமுகா்கள் கே.காா்மேகம், பிரவீன்தங்கம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். மாவட்டத்தில் 1,650 இடங்களில் 108 போ் கொண்ட 12 குழுவினா் இல்லந்தோறும் கல்வித் திட்ட விழிப்புணா்வில் ஈடுபடுவா் என கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கன்னோஜில் அகிலேஷ் யாதவ் போட்டி!

ஆரஞ்சு நிறத்தில் மாறிய ஏதென்ஸ் நகரம்: என்ன காரணம்?

கிருஷ்ணா தண்ணீரை நிறுத்தியது ஆந்திரம்: மிச்ச தண்ணீர்?

தெற்கு சீனாவை புரட்டிப்போட்ட பெருமழை: 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் நிவாரண முகாம்களுக்கு மாற்றம்

குருப்பெயர்ச்சி எப்போது? நன்மையடையும் ராசிகள் எவை?

SCROLL FOR NEXT