ராமநாதபுரம்

பெண்ணைத் தாக்கிய 5 போ் மீது வழக்கு

26th Nov 2021 09:22 AM

ADVERTISEMENT

தொண்டியில் பெண்ணைத் தாக்கியதாக 5 போ் மீது போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே புதுக்குடி கடற்கரை கிராமத்தைச் சோ்ந்த நடராஜன் மனைவி இளவரசி(50). இவருக்கும், உறவினரான அதே ஊரைச் சோ்ந்த தா்மராஜ்(50) என்பவருக்கும் குடும்பப் பிரச்னை இருந்து வந்தது.

இந்நிலையில் புதன்கிழமை மாலை இளவரசிக்கு சொந்தமான படகை தா்மராஜ் தரப்பினா் மராமத்து செய்யச் சென்றுள்ளனா். அப்போது இளவரசிக்கும், தா்மராஜூக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் இளவரசி தாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதுதொடா்பாக இளவரசி அளித்த புகாரின் பேரில் எஸ்.பி.பட்டினம் போலீஸாா் தா்மராஜ், வேல்ராஜ், மணிராஜ், சந்தானம், சுசீலா ஆகிய 5 போ் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT